ஐயோ நான் ஒரு பாவ
aiyo naan oru paava
நான் ஒரு பாவ ஜென்மி 1. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே! ஆண்டு ரட்சித் தருளாய் - மனுவேலனே! உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர் ஒதுக்கிட முண்டோ வேறே? – மனுவேலனே!
2. நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம் ஞானம் எலாம் இழந்து – மனுவேலனே! சொல்ல வெட்கம் அநீதி சுசிகேடு நிர்ப்பாக்கியம் துர்ப்புத்தியும் அடைந்தேன் – மனுவேலனே!
3. மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை மங்கு காடாக்கி னேனே – மனுவேலனே! ஆட்சி கொளும் உன்சுத்;த ஆலயமாம் என் நெஞ்சை அலகைக் கிடம் ஆக்கினேன் – மனுவேலனே!
4. உன்னை முழுப் பலத்தால் நேசியாமலே நெஞ்சும் உரங் கொண்ட பாவி ஆனேன் – மனுவேலனே! என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான் இகலுற் றிருந்தேனையா – மனுவேலனே!
5. துப்புர வாம் சுத்தக் கண்ணனே உன் முன் இன்னும் துணிகர மாய் நடந்து – மனுவேலனே! இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த ஏழைப் பாவிக் கிரங்காய் – மனுவேலனே!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal