ஐயரே நீர்தங்கும் என்னிடம்
aiyarae neerdhangum ennidam
1.ஐயரே, நீர்தங்கும் என்னிடம், ஐயரே, நீர்தங்கும்! - இப்போது அந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே, ஐயா, நீர் இரங்கும்.
2.பகல்முழுதுங் காத்தீர், சென்ற பகல்முழுதுங் காத்தீர்; - தோத்திரம்! பரமனே, இந்த இரவிலும் வாரும், பாவியை நீர் காரும்!
3.தங்கா தொருபொருளும் என்னிடம், தங்கா தொருபொருளும்; - யேசு தற்பரனே, நீர் ஒருவரேயென்னில் தங்கித் தயைபுரியும்.
4.உயிரே துமையன்றிப் பாவிக் குயிரே துமையன்றி? - என்றன் உடல் உயிர் உம்மால் உய்கிறதையா, உத்தமனே, தங்கும்.
5.நீர் தங்கிடும் வீட்டில், யேசுவே, நீர் தங்கிடும் வீட்டில், - எல்லாம் நிறைவே குறைவுண்டாமோ, கர்த்தா? நின்னை விடமாட்டேன்.
6.என்பாவம் மன்னியும், இறையே, என்பாவம் மன்னியும்; - அப்போது எளியேன் உம்மோ டயர்வேன், இரவில் எனக்கோர் திகிலேது?
7.எனக்கு நீர்காவல், என்றும் எனக்கு நீர்காவல்; - என்றன் இனத்தார் ஜனத்தார் எளியோர், வலியோர் எல்லவர்க்குங் காவல்.
8.உம்மோடே படுப்பேன், ஐயா, உம்மோடே படுப்பேன்; - இரவில் உம்மோ டயர்வேன், சேதமில்லாமல் உம்மோ டெழுந்திருப்பேன்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal