ஐயனே இவர்க் காசி ஈகுவாய்
aiyanae ivark kaasi eeguvaay
ஐயனே! இவர்க் காசி ஈகுவாய், மெய்யாய் உன்னைச் சார - என்றும்
பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு, மெய்யாய் உன்னைச் சார - என்றும்
1.பாவ முஞ்செக சால மும்விட்டுப் பனுவ லுரைப்படியே, - வெகு ஆவ லாயுன தருளி னாலுயிர் அடையக் கதி யடைய - என்றும்
2.நற்று திசெயும் பத்த ராயுன்றன் பொற்றா ளிணை போற்றி! - ஓங்கு சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச் சான்றோர் நெறிசார - என்றும்
3.இன்று தொட்டிவர் என்று மேயுனைச் சென்றே எங்குங் கூறிப், - பயன் நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினி ஒன்றி யுயர்ந் தோங்க - என்றும்
4.அன்று சீடராய்ப் பன்னி ருவரை அழைத்தாய், தயை விளைத்தாய்; - இவர் என்றுஞ் சபையில் ஒன்றி வைகிட நின்றுன் கிருபை ஈவாய் - என்றும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal