ஐயையா நான் பாவி
aiyaiyaa naan paavi
ஐயையா, நான் பாவி - என்னை ஆளும் தயாபரனே!
பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம் போனவழி நடந்தேன் - ஏ சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர் ஐயா, என் தாதாவே --- ஐயையா
எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள், எத்தனை தீதுகளோ? - எனது அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத் தாண்டருளும், கோவே --- ஐயையா
வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய் மாலமோ, ரண்டகமோ? - மனச் சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும், சமஸ்த நன்மைக் கடலே --- ஐயையா
பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும், பொறாமையும், ஆணவமும், விட் டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர் ஏகதிரித்துவனே --- ஐயையா
உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித் துன தடியார்களையும் - நான் என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க ஏவும், பராபரனே --- ஐயையா
வேத புஸ்தகத்தை ராவும் பகலும் விடா மற்றியானித்துக் கன சேதன நூல் வேதநாயகன் பாட்டைச் செபஞ் செய்கிறேன் காவே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal