ஐயா உனதருள்
aiyaa unadharul
ஐயா, உனதருள் புரி, அருமை மேசையா! பொய்யா மருள்வினை, செய்யா துலகதில் நையா தடிமைகொள், துய்யா, மெய்யா. – ஐயா
1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா, சாதா ரண வேத வினோத சங்கீதா, காதா ர வினவு,நீ தா எனின் குறை, தாதா, பர குரு நாதா, போதா! – ஐயா
2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா; சிந்தா குலமே தவிர், நீடு சுகந்தா; உந்தா பரம் அருள் எந்தா,ஞானப்ர பந்தா, வருசதா னந்தா நந்தா! – ஐயா
3. ஈசா, நசராபுரி மேவிய வாசா, பூசா விதி மாமறை புகழுபதேசா, மாசா மிகு பவ நாசா, எருசலை ராசா, ஒரு சரு வேசா, நேசா. – ஐயா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal