ஐயா நீரன்று அன்னா
aiyaa neerandru annaa
1. ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்ட பாடு ஏசையாவே! கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ? கயவர்கள் தூற்றினாரோ ஏசையாவே! – ஐயா
2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே! பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா
3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ எள்ளளவும் பேசாத ஏசையாவே! கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக் கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! – ஐயா
4.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர் தாம் முறுக்கிக் கர்வங்கொண்டே ஏசிட ஏசையாவே! சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்த சாடிக் கன்னத்தறைய ஏசையாவே! – ஐயா
5. பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே! அண்ணலே, அன்பருய்ய அவலங்களைச் சகித்தீர்; அடியேனைக் காத்தருளுதம், ஏசையாவே.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal