ஆழ்த்தியான நிலையதினில்
aazhthiyaana nilaiyadhinil
ஆழ்த்தியான நிலையதினில் அகம் பொழியும் - நம் ஆண்டவரின் திருவடிகள் அருள் பொழியும்
அமர்ந்தே அவர் இறைவன் என அறிவோம் - வெறும் ஆரவார அலையில் அவர் அகப்படமாட்டார் அமர் தென்றல் மெல்தொனியில் அவர் உள்ளார் அகமுறைந்தே ஆண்டு செயல்படுகின்றார்
அனுதினமும் அவரடியில் அமர்ந்திருந்தால் - இவண் அழிவில்லா நல்பங்கை அடைந்திடலாம் சுமை வாழ்வே இதுவென்று சோர்புறாமல் - அவர் சுருதி மொழி கருதியே உள் பலம் காண்போம்
அமைதியுடன் ஆர்வமதும் ஆழ்ந்திருந்தால் - மெய் அமைதியிலே ஆவியரின் அனல் பெருகும் இமை மூடி இருந்திடினும் மனம் முழங்கும் - நமில் இறையரசு இயங்குவதின் பொருள் விளங்கும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal