ஆவியை மழைபோலே
aaviyai mazhaibolae
ஆவியை மழைபோலே யூற்றும் - பல ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும் பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
அன்பினாலே ஜீவனை விட்டீர் - ஆவி அருள்மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர் இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ ஏராளமான ஜனங்களைச் சேரும்
சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும் தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
காத்திருந்த பலபேரும் - மனங் கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும் தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்
ஸ்தோத்திர கீதங்கள் பாடி - எங்கும் சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப் பாத்திரராக அநேகரெழும்பப் பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்
சாத்தானின் கோஷ்டம் அதிகம் அவன் தந்திரக் குணத்தின் சேஷ்டை அதிகம் கர்த்தன் கிறிஸ்துவின் திரு கரத்தாலே கலகம் குணங்களை ஒழித்திடச் செய்யும்.
வருகையின் நாள் கிட்டிடுதே - துஷ்ட மாறாட்டக்காரரின் கொடுமை மிக்குதே ஐந்து காயத்தில் அடைக்கலம் பெற மைந்தனே! பாவியை ஏவி எழுப்ப.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal