ஆவியை அனுப்பும்
aaviyai anuppum
ஆவியை அனுப்பும் ஐயா - அடியார்க்கும தாடியை அனுப்பும் ஐயா,
கூவியழைக்கும் எங்கள் குறைகள் அனைத்தும் போக மேவி இவ்விடம் வந்தெம் மீது கருணையாக - ஆவியை
தாகமுள்ளவருக்கு - ஜீவத்தண்ணீரைத் தருவேன் என்று சொன்னீரே! தாகம் தீர இனித் தாகமே இல்லாமல் வேகமாய் இதயத்தில் ஜீவ நதிகள் ஓட - ஆவியை
உலர்ந்த எலும்புகள் மேல் - உமதாவியை ஊதியருளுமையா கலகத்துப் போனோம் காய்ந்தே உலர்ந்து போனோம் பலனேதுமேயிலாத பாலைவனமே யானோம் - ஆவியை
கல்லறைகளிலிருந்து - கட்டோடு நாங்கள் கண் விழித் தெழுந்திடவே அல்லேலூயா சொல்லி ஆர்ப்பரித்து முழங்க நல்ல சுவிசேடத்தை நாடெங்கிலும் வழங்க - ஆவியை
உயிர்ப்பிக்க மாட்டீரோ - மீளவும் எம்மை உருவாக்க மாட்டீரோ? உயிருள்ள சபையாக உலகினிலே விளங்கப் பயிர்மீது மழை பெய்த பாங்கினைப் போலவே - ஆவியை
அன்பு பொறுமையில்லையே - ஆவியைப் பெற்ற அருமை சிறிதும் இல்லையே இன்பத் திருமறைதான் எடுத்தே இயம்புகின்ற ஏழும் எமது நெஞ்சில் இடம் பெறவும் இல்லையே - ஆவியை
ஆதித் திருச்சபைக்கே - எங்களை மீண்டும் அழைத்துச் செல்ல மாட்டீரோ? வீதியெங்கும் உமதன்பையே விளைத்திடும் வினைகளையே செய்ய வரந்தரமாட்டீரோ? - ஆவியை
எங்களை நொறுக்கும் ஐயா - ஏசையாநீர் எங்களை உருக்குமையா! தங்க முகச் சாயல் தங்கும் வரையுருக்கி இங்கித உருவாக்கி இதயத்தில் ஒளி செய்யும் - ஆவியை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal