ஆத்துமா கர்த்தரை
aathumaa kartharai
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே, என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே, - இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன் பார்த்திப னுடபதந் தினம்பணிந்தே. - இதோ! - ஆத்துமா
1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை அனைவரும் பாக்கிய ளென்பாரே, முடிவில்லா மகிமை செய்தாரே - பல முடையவர் பரிசுத்தர் என்பாரே. - இதோ! - ஆத்துமா
2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார், - நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்; உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார், - தன்னை உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார். - இதோ! - ஆத்துமா
3.முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் - அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் நட்புடன் நினைவொடு நல்லிஸரேல் - அவன் நலம்பெற ஆதரித் தார்மறவேல். - இதோ! - ஆத்துமா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal