ஆரும் துணை இல்லையே
aarum thunai illaiyae
ஆரும் துணை இல்லையே, எனக் காதியான் திருப்பாலாவுந்தன் ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத் தாளுவா யேசுநாதா
சீருலாவு பூங்காவி லோர்கனி தின்ற பாதகமாற்றவே சிலுவை மீதினிலே யுயிர்விடும் தேவனே என் சுவாமி
1.முந்து மானிடர் தந்த தீவினை முழுவது மறவேண்டியே முண்முடியுடன் குருசிலேறிய முன்னவா கிருபை கூர்வையே சிந்து முன்னு திரத்தி லென்வினை தீர்த்து ரட்சியு மையனே தீயபாவி யெனக்கு வேறொரு செயலிடந் துணை யில்லையே
2. தந்தை தாயரும் மைந்தர் மாதரும் சகலரு முதவார்களே சாகும் நாளதில் நீயலா லெனைத் தாங்குவார்களு முண்டுமோ சொந்தம் நீயெனக் கன்றி வேறொரு சொந்தமானவ ரில்லையே சுத்தமும் பொருளத்தமும் முள பத்தமே என தத்தனே
3. கள்ளனாகிலும் வெள்ளனாகிலும் பிள்ளை நானுனக் கல்லவோ கர்த்தனே வலபக்க மேவிய கள்ளனுக் கருள் செய்தையே தள்ளி என்னை விடாம லுன்னடி தந்து காத்தரு ளப்பனே தயவதாய் ஒரு குருசிலேறிய சருவ சீவ தயாபரா
4. நன்றி யற்றவ னாகிலு மெனைக் கொன்று போடுவதாகுமோ நட்டமே படுங் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடின தில்லையோ கொன்ற வர்க்கருள் செய்யவென்றுபி தாவை நோக்கிய கொற்றவா குற்றமேது செய்தாலும் நீ யெனைப் பெற்றவா பொறுத் தாள்வையே
5. பத்தியேது மிலாது மாய சுகத்தை நாடிய பித்தனாய்ப் பாழிலே எனின் நாளெலாங் கெடுத் தேழையாகினே னென்செய்வேன் சத்துருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடி தல்லவோ தஞ்சமற்றவ னாகினேன் உன தஞ்சல் கூறும் அனாதியே
6. அறிவில்லா தொரு மிருகமாக நான் அலைந்த பாதகனாகிலும் அருமை ரட்சகனே உனின் மனம் உருகுமே மிக உருகுமே மறுதலித்த பேதுருவைக் கைவிட மனது வந்தது முண்டுமோ மகதலா நகர் மரியின் மேலருள் வைத்தவா உனின் சித்தமே
7. சாதியாருட தீதெலாமற வாதையாய்க் கொல்கொதாவிலே தந்தையார் முன்னறைந்த நேர்குரு சின்கணேறி இறந்தவா வேதநாயக னோது பாடலின் மீது மாபிரிய நேசனே மேசியா மகராசனே யெனை மீண்டிரட்சியும் அபையமே
8. ஆயிரத்தி எண்ணூற்றி முப்பதாம் ஆண்டில் வந்த ஆபத்திலே ஆபறோ ஐயராற் பிரிந்தடி யன்படுந் துயரத்திலே தாயிதத்தினும் நேயம் வைத்துயர் சம்பளத்தை நடத்தவே தஞ்சையான் சரபோஜி மன்னிதை யத்திலே யருள் வைத்தவா
9. உன்னதப் பிதாவே விண்வாழ்வதும் உலக வாழ்வது மோங்கியே உத்தம புத்திர சீவாசி மன்னுட ஊழி காலமும் வாழியே யின்னமுஞ் சரபோஜி மன்னிதை யத்திலன்பு வளர்த்தியே என்னையு மெனின் வீட்டையு மெனின் பாட்டையுங் கிருபை கூர்வையே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal