ஆறுதல் அடை மனமே
aarudhal adai manamae
ஆறுதல் அடை மனமே -கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடை மனமே பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின் கூரை அழித்த யேசு கொற்றவன்றனை நோக்கி
நம்பிக்கை யற்றோரைப் போலே மரித்தோர்க்காக நலிவதேன் ஒருக்காலே உம்பர் கோன் மேகத்தின் மேலே - தோன்றிடும் போ துயிர்த்தெழும்புவ தாலே வெம்பிப் புலம்பி அழ வேண்டாம் கிறிஸ்து வெனும் தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து
ஜீவ நதிகள் ஓடுமே - எருசலேமில் திரளாய் ஜனங்கள் கூடுமே தேவ துதியைப் பாடுமே - யேசுகிறிஸ்தின் ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக
எண்ணம் கவலைகள் உண்டாம் மரித்தோர்க்காக ஏக்கம் பெருமூச்சும் உண்டாம் கண்ணீர் சொரிவதும் உண்டாம் -துயரம் மிஞ்சிக் கலங்கி அழுவதும் உண்டாம் அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார் நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரை விட்டு
யேசுவைப் பற்றின பேர்கள் - மரித்தும் உயிர்த் தெழுந்து புறப்படுவார்கள் மாசற்ற தேவன் அவர்கள் - உடனிருக்க மகிமை பெற்றிருப்பார்கள் பேச வேண்டுமோ யேசு ராசன் சமுகமதில் நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal