ஆரிடத்தில் ஏகுவோம்
aaridathil eguvom
ஆரிடத்தில் ஏகுவோம்? எம் ஆண்டவனே, ஆரிடத்தில் ஏகுவோம்?
ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி - ஆரி
1.பாவிகளாம் எங்களுக்கு - உமையல்லாது தாபரமில்லை; நீரே ஜீவன் தனையுடைய தேவகுமாரனாக மேவு கிறிஸ்தென்றுமையே - ஆவலுடன் நம்பினோம் - ஆரி
2.போனவர்போல நாங்களும் - உமை நெகிழ்ந்து போவதில்லை, பரமனே ஞானோபதேச குருவான உம்மை அண்டின ஈனர் இனிதுற்ற உமது - தானமதைப் பிரிந்து - ஆரி
3.உற்றார் சிநேகர் யாரையும் - எம் வீடுவாசல் உள்ள பொருளனைத்தையும் முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள் தெற்றாய்? இனியும்மைநன்றி - யற்றோர்போலே நெகிழ்ந்து - ஆரி
4.பொன் னுலகத் திருந்தெம்மைப் - புரக்க வந்த புண்ய நாதன் நீரல்லவோ? பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது நன்னய முகப்பிர - சன்ன மதனை விட்டு. - ஆரி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal