ஆரணத் திரித்துவமே
aaranath thirithuvamae
ஆரணத் திரித்துவமே யெமை யாண்டருள் மகத்துவமே
பூரணத் தேவ பிதாச்சுதனாவியே பொன்னுலகத் தெழு முன்னதமான போதக் கிருபையா பத்ததி நீதிச் சுடரே நித்திய - ஆரண
1.திஷ்டிதி சங்காரக்கர்த்தர் யெமைத் தேடி மணஞ் செய்த பர்த்தா இஷ்டப் பிரசாத வானத்தா இயேசுக் கிறிஸ்தாதித்தா அஷ்டதிக் கெங்கணும் நெஷ்டூரப்பட்டோம் அத்தனே பரிசுத்தனே படும் ஆபத்துகள் சோபத்துயர் நீவிப்பரதாபித்தருள் - ஆரண
2. பெருக்கத் துன்பனுபவித்தோங் கொடும் நெருக்கத்திற் பரதபித் தோம் உருக்கத்திற் கரங்குவித்தோமுனின் திருச் செபங்களைச் செபித்தோம் இரக்கமில்லையே நரத்தயாபரா எந்தையேயுனின் மந்தையே யேதித்தனை சோதிப்பது பாதத்தருள் போதக்கொடு - ஆரண
3. அன்றன் றுள்ளப் பத்தைத்தாரு மெங்கள் ஆபத்தனைத் தையுந்தீரும் இன்று மென்றென் றுந்தற்காரும் திரு இரக்கத்தான் முகம் பாரும் நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும் நம்பரா கருணாம் பரா ஞானத்தனுமானத் தொளிர் மேன்மைத் திவிய பானத்தனே - ஆரண
4. மூவரொன்றான யேயோவா உயர் முக்கிய கிருபையின் தேவா மேவியடியரைக் காவா நெல்லை வேதநாயகன் பாவா பாவிகள்நாங்க ளேவையின் மக்களே பக்கிஷமே பரம பொக்கிஷமே பாடும்புகழ் நாடும் பரிவோடுந்தயை நீடும்பரா - ஆரண
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal