ஆண்டவனே கிருபை
aandavanae kirubai
ஆண்டவனே கிருபை கூராய் எனக் காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்
மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா
துர்க்குணத்தி லுருவானேன் பொல்லாத் தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன் நற்குண மென்னில்நான் காணேன் - நித்ய நாச மரண நரகுக்குள்ளானேன் சற்குண மன்பு தயைமிகு தேவா தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா
பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே பாவம் பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே நோவென்னைப் பிசித்ததென் ஐயே - எனை நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ என் பாவச்சேற்றை விட்டென்னைத் தூக்காயோ
சாபத்துக்களாய்ப் போனேன் சீனாய்த் தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே கோபத்தின் தீயைக்கண்டேனே - தேவ கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம் ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம்
பாடெனக்காய்ப் பட்டாயன்றோ என்றன் பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ கேடென்னில் நிற்பதும் நன்றோ - என்னைக் கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய் நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal