ஆண்டவா உன்றன்
aandavaa undran
ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத் தூண்டும் உன் ஆவி அருள்வாய்.
என்னைத் தியாகிக்க ஏவும் உன் அனல் மூட்டிடுவாய், இந்நிலம் தன்னில் மாளும் மனுமக்கள் மீட்பிற்காக. - ஆண்
1. புசிக்கப் பண்டமில்லாமல், பூவில் இல்லமுமே அன்றி, நசிந்து நலிந்து நாட்டில் கசிந்து கண்ணீர் சொரிந்து தேச மெல்லாம் தியங்கும் நேசமக்கள் சேவைக்கே நிமலா, எனை ஏற்றுக்கொள். - ஆண்
2. வறுமை வன் கடன் வியாதி, குருட்டாட்டம் கட்சி கடும் அறிவீனம் அந்தகாரம் மருள் மூடி மக்கள் வாடும், தருணம் இக்காலமதால், குருநாதா உனதன்பை அருள்வாய், அடியேனுக்கே. - ஆண்
3. அருமை ரட்சகா, உன்றன் அரும்பாடு கண்ணீர் தியாகம், பேரன்பு பாரச் சிலுவை, சருவமும் கண்ட என்றன் இருதயம் நைந்துருகி வெறும் பேச்சாய் நின்றிடாமல் தருணம் எனையே தந்தேன். - ஆண்
4. உலகே உன தாயினும் தலை சாய்க்கத் தாவில்லாமல் நலமே புரிந்து திரிந்தாய்; எல்லாம் துறந்து யான் உன் நல்லாவி கொண்டுழைக்க, வல்லா, உனின் சிலுவை அல்லால் வழி வேறுண்டோ? - ஆண்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal