ஆனந்தமாக அலையலையாக
aanandhamaaga alaiyalaiyaaga
ஆனந்தமாக அலையலையாக ஐய்யா உம் சந்நிதியில் நான் அநுதினம் நுழைவேன் அன்பினில் மகிழ்வேன் உம் அருகில் ஒரு மனமாக ஒரு நினைவாக இருப்பேன் உம் அருகினிலே இதைவிட வேறென்ன வேண்டுமோ எனக்கு வாழ்வினிலே
ஓவ்வொரு முறையும் விழித்திடும்போது உம் முகம் பார்த்தே விழித்திடவேண்டும் இதுதானே என் வாழ்வில் நான் வேண்டும் பாக்கியம் காலையும் மாலையும் கணக்கில்லாமல் கர்த்தரின் முன்னே காத்திட வேண்டும் மெய்யாக இதுதானே ஐய்யா என் ஆசையும் கண்மணிபோல் எனை காத்திடும் தேவனின் கரமதில் நானும் அடங்கிருப்பேன் என்னையும் ஒரு பொருட்டாக நினைத்திட என்னதான் உமக்கு நான் கொடுத்தேன்
வழி தெரியாமல் வாழ்ந்திடும்போது வலக்கரம் நீட்டி வரவழைத்தீரே வந்தேனே உம்முன்னே என் இயேசு ராஜனே உருத்தெரியாமல் சிதைந்திடும்போது உருவகம் கொடுத்து உயிர்ப்பித்தீரே உம் பாதம் அது போதும் எனையாளும் தேவனே இது தெரியாமல் இதுவரை நானும் இருட்டினில் மூழ்கிக் கிடந்தேனே இரக்கமும் உருக்கமும் நிறைந்த தேவனின் கிருபையினால் இன்று பிழைத்தேனே
தாயின் கருவினில் தோன்றினமுதலே தாங்கி வந்தீரே ஏந்தி வந்தீரே தள்ளாடும் வயதுவரைக்கும் தயை காட்டும் தகப்பனே நோயும் நொடியும் அணுகிவிடாமல் தீயும் தண்ணீரும் சூழ்ந்துவிடாமல் கன்மலை வெடிப்பில் வைத்தென்னை காக்கும் கனிவான தேவனே யுத்தநாளில் என் தலையை மூடினீர் இத்தனை அன்பா என் மீதில் எத்தனை பெரிய பாக்கியமே-இந்த அடிமைக்கு கிடைத்த சிலாக்கியமே
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal