ஆதிசுதன் மானிடவதார மானார்
aadhisudhan maanidavadhaara maanaar
1. ஆதிசுதன் மானிடவதார மானார். அம்புவியை தமக்குறவதாக்கி கொண்டார். வாதையுறப்பாடு பட்டார் சிலுவை மீது மரித்தடக்கப்பட்டுயிர்த்தார் வான்போய் நின்றார். நீதியெல்லாம் நிறைவேற்றி முடித்தாரென்றும் நிலுவையில்லை வாழ்வனைத்துஞ் சம்பாதித்தார். பாதகர்க்கு பயமினியேன் ஆடிரூஞ்சல். பராபரனின் பிள்ளைகள் நீர் ஆடிரூஞ்சல்.
2. உண்டான நன்மையெல்லாம் நமக்குண்டாச்சு. உம்பரமும் அம்பரமும் நமக்கென்றாச்சு. அண்ட சராசரங்களெல்லாம் நமக்கே சொந்தம். அனாதிசுதன் தானும் நமக்கருளப்பட்டார். கண்ட கண்ட சிஷ்டியெல்லாம் நமக்கல்லாமற் கடவுளுக்கே தேவை யென்ன கவைகாளென்ன? பண்டோரேமன்றி யறிந்தா உருஞ்சல். பராபரனின் பிள்ளைகள் நீர் ஆடிரூஞ்சல்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal