ஆதிபிதாக் குமாரன்
aadhibidhaak kumaaran
ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு அனவரதமும் தோத்திரம் திரியேகர்க்கு அனவரதமும் தோத்திரம்
நீதி முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் நிறைந்த சத்திய ஞான மனோகர உறைந்த நித்திய வேதா குணாகர, நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் -ஆதி
எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு சோதனைசெய் அதி நீதர் பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான் பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும் பண்பதாய்சு யம்பு விவேகன் அன்பிரக்கத யாளப்பிரவாகன் பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரி பாலனத்தையும்பன் பாய்நடத்தி அருள்செய்
நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம் நீனிலத்தில்லாமல் அழிந்து தீதுறு நரகில் தள்ளுண்டு மடிவோ மென்று தேவா துருவுளம் உணர்ந்து பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு பரன் எங்கள்மிசை தயை வைத்தனர் இது நன்று பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் பாரில் நேரிடும் அஞ்ஞான தேசமுதற் சூரியன் முன் இருள் போலவே சிதறும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal