ஆதரை மீதினில் ஆறுதல்
aadharai meedhinil aarudhal
ஆதரை மீதினில் ஆறுதல் இன்றி நான் அலைந்தேன் வெகுநாள் பெரும் பாதகனாய் -2 அருகினில் வந்து உம் கரங்களால் அணைத்து - 2 அகற்றினீர் என் பாவம் அனைத்தும் உம் ரத்தத்தால் -2
1. அன்பினை தேடினேன் அகிலமெல்லாம் காணேன் - 2 என்றும் மாறா அன்பு யாரிடம் தானுண்டு அன்பினை தேடினேன் அகிலமெல்லாம் காணேன் என்றும் மாற அன்பு உம்மிடம் தானுண்டு சேயினைக் காக்கும் தாயினும் நேசித்தீர் - 2 ஆயிரம் நாவிருந்தும் போதாது உம்மைப் பாட -2
2. என் பின்னே வா என்று கனிவுடன் அழைத்தீர் -2 இனிமை உம் வாக்குகள் தேனிலும் மதுரமே என் பின்னே வா என்று கனிவுடன் அழைத்தீர் இனிமை உம் வாக்குகள் தேனிலும் மதுரமே வாக்களித்தவர் நீர் வாக்கு மாறாதவர் - 2 இதுவரை காத்தவர் இறுதிவரை காப்பீர் - 2
3. என்ன இடர் வந்தும் என்னை நோக்கிப் பார் என்றீர் - 2 தம் திருமுகமே எம் பெரும் மறைவே என்ன இடர் வந்தும் என்னை நோக்கிப் பார் என்றீர் தம் திருமுகமே எம் பெரும் மறைவே திருவசனம் தந்து ஒளிமிகு பாதையில் - 2 அருள்தந்து நடத்திடும் அழைத்தவர் நீர் அல்லோ - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உம்மை துதிக்கிறோம் இயேசுவேummai thudhikkirom yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam