ஆ அம்பர உம்பர
aa ambara umbara
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார்.
ஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். - ஆ!
1.அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ அச்சய சச்சித - ரட்சகனாகிய உச்சிதவரனே! - ஆ!
2.ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று அல்லிராவினில் - தொல்லையிடையினில் புல்லணையிற் பிறந்தார். - ஆ!
3.ஞானியர் தேட, - வானவர் பாட, - மிக நன்னய, உன்னத - பன்னரும் ஏசையா இந்நிலம் பிறந்தார். - ஆ!
4.கோனவர் நாட, - தானவர் கொண்டாட- என்று கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே, யூத கோத்திரன் பிறந்தார். - ஆ!
5.விண்ணுடு தோண, - மன்னவர் பேண - ஏரோது, மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார். - ஆ!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal