இயேசுவே தெரிந்தெடுத்தீர்
yesuvae therindhedutheer
இயேசுவே தெரிந்தெடுத்தீர் உம் ஜீவனைத் தந்தெடுத்தீர் உம் இரத்தத்தால் தத்தெடுத்தீர் உம் பிள்ளையாய் மாறிவிட்டேன்
1. ஆயுள் காலமெல்லாம் அன்பு கொண்ட இயேசுவே அழைத்த அழைப்பில் நின்று உம்மை நானும் சேவிப்பேன் ஆதி அப்போஸ்தல உபதேசம் நாளும் கற்று என்றுமே ஆயிரம் ஆயிரமாய் உம்மண்டைச் சேர்ப்பேனே- இயேசுவே
2. அறுவடை சேவையை அயராது நடத்திடும் இயேசுவே அடைந்த பலன்தனை ஆண்டவர் பாதத்தில் சேர்த்துமே படர்ந்து விரியும் இயேசுவின் நாமம் கூறி என்றுமே பரலோகம் சேர்ந்திடவே பலவந்தம் பண்ணுவேன்
3. விசுவாச ஊழியத்தில் வீரம் தந்த இயேசுவே ஜெபித்து குன்றுகளைத் தகர்த்து நானும் உடைத்திடுவேன் மீட்பின் பணியில் இயேசுவையே நாளும் உயர்த்தி என்றுமே தரிசிக்கும் முகங்களையே உம்மண்டை இழுத்திடுவேன்
4. எழுப்புதல் சபையதனை கரத்தில் எடுத்த இயேசுவே ஜீவனைத் தந்துமே உம்முடன் இணைந்து வாழ்ந்திடுவேன் இரட்சண்ய இயேசுவின் நாமமதை நாளும் பாடி என்றுமே இரட்சிபபைக் கூறியே அறுவடை செய்திடுவேன்- இயேசுவே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal