அநுக்கிரக காலத்திலே
anukkiraga kaalathilae
அநுக்கிரக காலத்திலே செவி கொடுத்தால் இரட்சண்ய நாளிலே உதவி வரும் கர்த்தரில் ஊன்றக் கட்ட செவிகொடுத்தால் வெட்கப்பட முடியாத மேன்மை வரும்
1. போஷித்துக் காப்பாற்றும் கர்த்தரையே கூடிவரும் சபையில் நீ துதித்திடுவாய் வாஞ்சையும் நம்பிக்கையும் உன்னில் பெருகும் “கிறிஸ்து எனக்கு ஜீவன்” சாட்சியிடுவாய்
2. பக்தி வைராக்கியம் வளர்த்து விடு இயேசுவை அறிகிற அறிவடைவாய் நீதியின் பாதையில் நீ நடப்பாய் திருச்சபை ஐக்கியத்தில் ஸ்திரப்படுவாய்
3. முந்தினதை என்றும் நீ பழமையாக்கிடு பிந்தினதை என்றென்றும் புதுமையாக்கிடு கூடி வரும் சபையில் நீ நிலைத்திடுவாய் பழி வாங்கும் செயலை நீ விட்டிடுவாய்
4. தூஷிப்பவர் நடுவில் என்றும் போய்விடாதே எதிர்ப்பவர் பக்கம் நீ சேர்ந்து விடாதே ஒரு விசை கொண்ட நல்ல விசுவாத்தில் நித்தமும் வளர்ந்து நீ கனிகொடுப்பாய்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அற்புத இயேசுவேarpudha yesuvaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal