இயேசுவே எங்கள் தேவனே
yesuvae engal devanae
இயேசுவே எங்கள் தேவனே உம் கிரியைகளை அடியார் கண்டு களிகூரக் கிருபை செய்வீரே
உடனே கிரியைகளைச் செய்வீர் எங்கள் தேவாதி தேவனே உடனே கிரியைகளைச் செய்வீர் எங்கள் இயேசு தேவனே கிரியைகளை அடியார் காணக் கிருபை செய்வீரே
இயேசுவே உம் மா உன்னதக் கிரியைகளைக் கண்களால் கண்டு களிகூர்ந்திடவே கிருபை செய்வீரே
இயேசுவே உம் மா பெரிய கிரியைகளைக் காதுகளால் கேட்டு மகிழ்ந்திடவே நீர் கிருபை செய்வீரே
இயேசுவே உம் அதிசயக் கிரியைகளை நாவுகளால் பேசி மகிழ்ந்தானந்திக்கக் கிருபை செய்வீரே
ஊமையரும் செவிடரும் குருடரும் சுகமடைவதைக் கண்ணால் கண்டு களித்திடவே கிருபை செய்வீரே
ஊனரும் சப்பாணிகளும் குதித்து நடப்பதைக் கண்ணால் கண்டு பிரமிக்கக் கிருபை செய்வீரே
மரித்தவர்கள் உயிரடைந்து எழுந்து நடப்பதைக் கண்ணால் கண்டு அதிசயிக்கக் கிருபை செய்வீரே
குஷ்டரோகிகள் சுத்தமாகி மாம்சம் நிறம் மாறுவதைக் கண்ணால் கண்டு பூரிக்கவே கிருபை செய்வீரே
உலகம் முழுதும் உம் கிரியைகள் நடப்பதைக் கண்டும் கேட்டும் பிரமித்திடவே கிருபை செய்வீரே
உலகம் முழுதும் உம் சுவிசேஷம் பிரபலம் அடைவதை அடியார் கண்டு ஆனந்திக்கக் கிருபை செய்வீரே
இரட்சிப்பின் கெம்பீர சத்தம் எங்கும் முழங்குவதை கண்டும் கேட்டும் பூரிக்கவே கிருபை செய்வீரே உடனே
அடியார்களின் இருதயம் உம் மாபெரும் கிரியைகளால் கொழுந்து விட்டு எரிந்திடவே கிருபை செய்வீரே
பரலோகத்தின் சந்தோஷத்தைப் பூலோகிலும் அடியார் கண்டு ஆனந்திக்கவே நீர் கிருபை செய்வீரே உடனே
ஆச்சர்யத்தால் ஆர்ப்பரித்து ஆடிப்பாடிக் களித்து ஆனந்தத்தால் குதித்திடவே கிருபை செய்வீரே
அற்புதங்கள் அடையாளங்கள் பயங்கரக் கிரியைகளை அடியார் கண்டு பிரமிக்கவே கிருபை செய்வீரே உடனே
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj