ஆனந்தம் ஆனந்தமே
aanandham aanandhamae
ஆனந்தம் ஆனந்தமே பேரானந்தம் ஆனந்தம் ஆனந்தமே - ஆ! ஆ ஆயிர வருட அரசாட்சியிலே
பரிசுத்தவான்கள் தாமே இப்பூவுலகை கிறிஸ்து இயேசுவோடு - ஆ! ஆ! ஆயிரம் வருடம் அரசாண்டிடுவார்
மகிமையின் சரீரமதை நாம் பெற்று மகிழ்ந்து களிகூர்ந்து - ஆ! ஆ பறந்தெங்கும் சென்றிடலாம்
புனித எருசலேமில் புனிதர் இயேசு புகழ்ச்சியாய் வீற்றிருப்பார் - ஆ! ஆ ! புனிதர் புகழ் ஓங்கிடவே
ஓனாய் ஆட்டுக்குட்டியுடனும் புலி வெள்ளாடுடனும் - ஆ! ஆ ஒருமித்துப் படுத்திருக்கும்
பாலசிங்கம் காளையுடனும் பசு கரடியுடனும் - ஆ! ஆ ஒருமித்துக் கூடிமேயும்
சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்று மாட்டைப் போல் வாழும் - ஆ! ஆ சிறுவன் அதை நடத்திடுவான்
பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்பின் வளையின் மேல் விளையாடும் - ஆ! ஆ தீங்கு ஏதும் நேர்வதில்லை
பால் மறந்த குழந்தை கட்டுவிரியன் புற்றிலே கையை வைக்கும் ஆ! ஆ கேடும் தீங்கும் நேர்வதில்லை
பரிசுத்த பிள்ளைகட்கு அன்னியர் பண்ணையாட்களும் - ஆ! ஆ பணிவிடைக் காரருமாய்
ஜாதிகளின் செல்வத்தை அனுபவித்து மகிமையும் மேன்மையுமாய் ஆ! ஆ அரசாட்சி செய்திடுவோம்
சீயோன் மலைதனிலே ஓர் விருந்தைச் சீரும் சிறப்புமாக - ஆ! ஆ ஆயத்தமாக்கித் தந்திடுவார்
கர்த்தாதி கர்த்தரின் ஆசாரியரும் ராஜாக்களுமாய் - ஆ! ஆ என்றென்றும் பரலோகத்தில்
சந்தோஷத்தின்மேல் சந்தோஷமும் மகிழ்ச்சிமேல் மகிழ்ச்சியும் - ஆ! ஆ சதாகாலங்களிலுமே
அல்லேலூயா அல்லேலூயா என்றார்டப்பரித்து துதி கனம் மகிமையுடன் - ஆ! ஆ தேவனைத் துதித்துப் போற்றிடுவோம்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj
- ஆவியின் வரங்கள் அளவில்லாமல்aaviyin varangal alavillaamalSadhu. C. Selvaraj