ஆவியின் வரங்கள் அளவில்லாமல்
aaviyin varangal alavillaamal
ஆவியின் வரங்கள் அளவில்லாமல் பொழிந்தருளும் தேவனே - 2 ஆவி ஆத்மா சரீரமும் புத்துயிர் அடைந்திட - 2
ஞானம் புத்தி அறிவையும் ஆலோசனையையும் - 2 உணர்வும் தேவ பயமும் உம் ஆவியால் அருளும் - 2
சத்துவமில்லாமையையும் சோர்பையும் நீக்கி - 2 உற்சாகத்தின் ஆவியால் எம்மைத் தாங்கி நடத்தும் -2
பெலவீனங்களில் உதவி செய்யும் ஆவியானவர் - 2 வாக்குக்கடங்காப் பெருமூச்சோடு நமக்காய் வேண்டுபவர் - 2
ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம் - 2 ஆவியின்படியே நடக்கிறவர்கள் ஆக்கினைத் தீர்ப்படையார் - 2
கிறிஸ்துவின் ஆவியுடையவர்களே கிறிஸ்துவுடையவர்கள் - 2 கிறிஸ்து இயேசுவின் சீடர்கள் கிறிஸ்தவர்கள் - 2
ஆவியின் அணைத்துவிடாமல் ஆவியிலே பிழைக்க - 2 ஆவியினாலே ஜெபம்பண்ணி உறுதியாய்த் தரித்திருப்போம் - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj