ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளை
aa aayiram aayiramaam pon velligalai
ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைப் பார்க்கிலும் கர்த்தர் வேதம் எனக்கு நலம்
1. உம் வேதத்திலுள்ள அதிசயங்கள் - யான் காணும்படி கண்கள் திறந்தீரே - உம் வேதத்தை விட்டு விலகிடாமல் எப்போதும் உம்மோடு ஒன்றாய் வாழ
2. கர்த்தரின் வேதம் என் மகிழ்ச்சியும் - அவர் வசனம் எனக்கு வெளிச்சமும் என் கால்களுக்கு நல்ல தீபமுமாகவே தானே எப்போதும் இருக்கிறது
3. கர்த்தரின் வேதத்தை நேசிப்போர் - மிக சமாதானமாகவே வாழ்கின்றனர் அவர் வேதத்தின்படியே தான் நடக்கின்றவர்கள் உத்தமமானவர்கள்
4. கர்த்தரின் வேதம் சத்தியம்- அவர் வசனம் என்றும் நிலைத்திருக்கும் வானம் பூமி யாவும் அழிந்து ஒழிந்து போகும் கர்த்தர் வார்த்தை ஒழிவதில்லை
5. பொன்னிலும் மிகுந்த பசும் பொன்னிலும் - வேதம் மிகவும் விரும்பப்படத்தக்கது - நல்ல தேனிலும் தேன் கூட்டில் இருந்து ஒழுகும் தெளி தேனிலும் இனியது
6. ஆத்துமாவை வேதம் உயிர்ப்பிக்கும் - இந்த சரீரத்தையும் புதுப்பிக்கும் - கர்த்தரின் சத்திய வேதத்தில் எவ்விதக் குறைவும் எவ்விதக் கேடும் இல்லை
7. கர்த்தர் அருளிய புஸ்தகமே - இந்தப் பரிசுத்த வேத புஸ்தகம் -மனு மக்களின் மகிமையான மீட்புக்காகத்தானே ஈவாகத் தேவன் ஈந்தார்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj
- ஆவியின் வரங்கள் அளவில்லாமல்aaviyin varangal alavillaamalSadhu. C. Selvaraj