இயேசுவே என் தேவனே
yesuvae en devanae
இயேசுவே என் தேவனே - 2 ஏன் இந்தப் புவிதனில் எதற்காக வந்தீர் - ஆ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
துக்கம் அடைந்திடவோ - 2 துயர் அடைந்திடவோ தூஷிக்கப்பட்டிடவோ ஓ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
வியாகுலம் அடைந்திடவோ - 2 வேதனை அடைந்திடவோ இரத்தம் சிந்திடவோ - ஓ! - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
கைகள் கட்டப்படவோ - 2 கண்களும் கட்டப்படவோ கல்தூணிலும் கட்டப்படவோ ! - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே - 2
கன்னத்தில் அடிபடவோ - 2 கண்ணீர் விட்டிடவோ கவலைகள் அடைந்திடவோ - ஓ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? 2
முகத்தில் துப்பப்படவோ - 2 முகமும் மூடப்படவோ முதுகிலும் அடிபடவோ - ஓ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
பரிகாசம் அடைந்திடவோ - 2 பரிதாபம் அடைந்திடவோ பாடுகள் அடைந்திடவோ - ஓ எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
வாரினால் அடிபடவோ - 2 வாதைகள் அடைந்திடவோ வதைக்கப்பட்டிடவோ எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
தாகம் பசி அடைந்திடவோ - 2 தாடையும் பிட்கப்படவோ தரையிலும் தள்ளப்படவோ - ஓ! - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே - 2
மூங்கில் தடியால் அடிபடவோ - 2 முகங்குப்புற விழுந்திடவோ மூர்ச்சித்தும் விழுந்திடவோ ஓ - 2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
சிரசினில் அடிபடவோ - 2 சிலுவையும் சுமந்திடவோ சிலுவையோடும் விழுந்திடவோ - ஓ! எதற்காய் வந்தீர் என் தேவனே - 2
முள்முடி சூடிடவோ - 2 மூன்றாணியில் தொங்கிடவோ மா வேதனைகள் அடைந்திடவோ - ஓ எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
தலையில் கை கால்களிலும் - 2 ஆணிகள் துளைத்திடவோ விலாவில் ஈட்டி துளைத்திடவோ - ஓ! எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
சிறுமைப்பட்டிடவோ - 2 சிலுவையில் அறையப்பட்டவர் சிலுவைதனில் மாண்டிடவோ - ஓ! -2 எதற்காய் வந்தீர் என் தேவனே? - 2
எனக்காய் இக்கோர - 2 பாடுகள் அடைந்தென்னை மீட்டு இரட்சிக்க வந்த - ஆ - 2 என் தேவனே உம்மை மறவேன் - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj