இயேசுவே என் தேவனே
yesuvae en devanae
இயேசுவே என் தேவனே - உம்மை நான் என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
1. என் அருமை இயேசுவே அவனியில் உம்மை நான் -2 அனுதினமும் போற்றித் துதித்திடுவேன் - இயேசுவே
2. பரலோகில் வீற்றிருக்கும் பரிசுத்த தேவனே -2 பயத்துடன் பரிசுத்தமாய் பணிந்து தொழுதிடுவேன் -- இயேசுவே
3. பாரக் குருசில் தொங்கி ஜீவன் விட்ட தேவனே -2 ஒரு போதும் உம்மை நான் மறக்க மாட்டேன் - இயேசுவே
4. உருக்கமும் இரக்கமும் நிறைந்த நல்ல தேவனே -2 முழங்கால்படியிட்டு குனிந்து பணிந்திடுவேன் - இயேசுவே
5. ஆவியாய் இருக்கிற என் பிதாவும் தேவனே -2 - ஆவியோடும் உண்மையோடும் பக்தியுடன் தொழுதிடுவேன் ! - இயேசுவே
6. மிகப் பெரியவர் எந்தன் இயேசு தேவனே -2 முகங்குப்புற விழுந்து பொற்பாதம் பணிந்திடுவேன் - இயேசுவே
7, வானாதி வானங்களும் கொள்ளமாட்டா தேவனே -2 பயந்து நடுநடுங்கி சாஷ்டாங்கமாய் பணிவேன் - இயேசுவே
8. கருணையின் தேவனை கர்த்தாதி கர்த்தரை -2 கரங்கள் குவித்து சிரம் தாழ்த்தி தொழுதிடுவேன் - இயேசுவே
9, ஸ்தோத்திரித்துத் துதித்துப் புகழ்ந்தும் போற்றிடுவேன் -2 என்றென்றும் பொற்பாதம் பணிந்து வணங்கிடுவேன் - இயேசுவே
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj