இயேசுவே என் தேவனே
yesuvae en devanae
இயேசுவே என் தேவனே என் மனம் மகிழுதே வஞ்சகன் விரித்த வலை தனிலே சிக்காமல் தடுத்தீரே
1.உலகத் தோற்ற முன்னே மறைந்திருந்த ஞானம் இரட்சகர் இயேசு மீட்பில் உலகம் மகிழ்ந்து காணுதே மாண்டு மடிந்த ஜனம் மகிமை கண்டிடுதே மாட்சிமை செழிமையே மனதில் நிறைந்திடுதே-இயேசுவே
2.தெய்வீக குணங்களில் வளர்ந்து மலரும் வாழ்வு இயேசுவின் வசனத்தால் வாழ்வு செழித்து ஓங்கும் வறண்டு விரண்ட ஜனம் விழித்து எழுந்திடுதே தெய்வீக வசனங்களில் கிருபை வளர்ந்திடுதே-இயேசுவே
3.நீதியின் வழிகளில் நிலைத்திடும் அன்பு இயேசுவின் தயவினால் அன்பு பொங்கி வழியுதே நிர்மூலமான ஜனம் நிமிர்ந்து துதித்திடுதே நன்மையும் மேன்மையுமே இந்நாளில் நிறைந்திடுதே - இயேசுவே
4.சீயோன் மகிமையில் சிறந்து நின்றிடும் சீயோன் இயேசுவின் அழகினால் பறந்து புகழ்ந்து பாடும் சிதறி போன ஜனம் சபையில் கூடிடுமே ஜொலிக்கும் மணவாட்டி நேசரை சந்திக்குமே - இயேசுவே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal