இயேசு ராஜன் பெயரை
yesu raajan peyarai
இயேசு ராஜன் பெயரை சொன்னால் எத்தனை ஆனந்தம் - சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் எத்தனை பேரின்பம் அவரை அறிவதே - எனக்கு நித்திய ஜீவனே தூய ஆவியே - என்னில் நிரம்பி வழியுதே - தேவ
1. அழைத்தால் வருவேன் அணைத்துக்கொள்வார் ஆறுதல் தந்திடுவார் நினைத்ததெல்லாம் செய்து முடிக்கும் ஆற்றல் வழங்கிடுவார் அவரைப் போல் ஒரு தெய்வமில்லை அவனியில் எவரையும் கண்டதில்லை
2. வானத்திலிருந்து வந்தவர் - எம் பாவத்தையெல்லாம் தீர்த்தவர் - நீல வானத்தின்கீழே பூமியின் மேலே எங்கும் உயர்ந்தவர் வழுக்கி விழுந்தால் தூக்கிடுவார் வலக்கரம் நீட்டி தேற்றிடுவார்
3. நம்பிக்கை தருவார் நடந்து சென்றால் நிழலாய் இருந்திடுவார் நான் செல்லும் படகு அசையாதிருக்க நங்கூரமாகிடுவார் நித்திய தேவா நின்திருபாதம் நிதமும் நானும் தொழுதிடுவேன்
4. கேட்டால் கொடுப்பார் ஜெபித்தால் தருவார் தேவாதி தேவனவர் கேளாததெல்லாம் வேண்டுவதெல்லாம் ஏராளம் வழங்கிடுவார் நம்பிக்கையோடே கேட்டிடுவோம் நல்லவர் சித்தம் செய்திடுவோம்
5. மகிமையின் தேவன் மகத்துவராஜன் மதில்கள் தாண்டிட செய்வார் மாறாத தேவன் மறுரூபமாக்கி மகிமையில் சேர்த்திடுவார் முழுமனதுடனே துதித்திடுவோம் முழங்கால்படியிட்டு முழங்கிடுவோம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam