அருளும் திறந்தருளும்
arulum thirandharulum
அருளும் திறந்தருளும் கண்களை திறந்தருளும் வேத மகத்துவ ஆழம் அறிந்திட தேவ திரித்துவம் ஞானம் உணர்ந்திட திறந்திடும் மன கண்கள் எனக்கில்லையே - அதினால்
1. எதிரிகள் சூழ்ந்தென்னை நெருக்கையிலே - மனம் பதறியழுது தினம் புலம்புகிறேன் தேவனின் சேனைகள் சூழ்ந்தென்னை காப்பதை காண்கின்ற கண்களும் எனக்கில்லையே - அதினால்
2. வறண்ட வனாந்திரம் தொடர்ந்திடுதே - சிறு துருத்தியும் நீரின்றி உருண்டிடுதே பிள்ளையின் அழுகுரல் ஆண்டவர் கேட்டிட இச்சை நீர் சுணையொன்று தென்படவே - எனக்கு
3. உதிரத்தினால் பாவ களிம்பகற்றி - வெறும் பதர் என அலைந்த என் துயர் விலக்கி கதிர்மணியாக்கி தம் களஞ்சியம் சேர்த்திடும் கற்பகமே தற்பரனே - அற்புதனே உமை - காண
4. வழியருகேயமர்ந்த வறியவன் போல் - இரு விழிகளும் இழந்துளம் உடைந்ததினால் கதிரொளி கண்டபின் மறைந்திடும் பனித்துளி மறைவதைப் போலெந்தன் அகத்திரை - திறந்திட
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆட்டு குட்டியானவரின்aattu kuttiyaanavarinEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam