இயேசு பாதம் அழகானதே
yesu paadham azhagaanadhae
இயேசு பாதம் அழகானதே அழகு பாதம் சுவிசேஷமே
“நல்ல தரமான சுவிசேஷம்”
1. மனிதர்களின் மீட்பு சுவிசேஷ கிறிஸ்துவே கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகமெங்கும் சென்றால் எங்கும் எவரும் சுவிசேஷம் ஏற்பார்கள் குறைவு நீங்கிடும் நிறைவு பொங்கிடும் -2 “நல்ல தலைமுறை சுவிசேஷம்”
2. தலைமுறை தலைமுறையாக சுவிசேஷம் சொன்னால் ஜாதிகளுக்குள்ளே அது ஒளி மயமாகும் ஒளியான குடும்பம் குடியயேற்றப்படும் ஒற்றுமை குடும்பத்தில் சுவிஷேசம் ஓங்கும் “நல்ல செயல் முறை சுவிசேஷம்”
3. சமாதான சுவிசேஷம் உலகெங்கும் பரவிட பிசாசின் தந்திரங்களை அறிந்து எதிர்த்து வேத வசன ஆவியின் பட்டயத்தோடே எந்த சமயத்திலும் இயேசுவை சொல்வோம் “நல்ல சுவிசேஷ களஞ்சியம்”
4. சுவிசேஷத்தின் இரகசியத்தை எங்கும் அறிவித்திட வாக்கு வல்லமை அருளும் ஆவியோடே இருதயத்தை ஆறுதலால் ஆயத்தப்படுத்தி கிறிஸ்துவின் சுவிசேஷ களஞ்சியமாவோம் “நல்ல சந்தோஷ சுவிசேஷம்”
5. அன்பை நாடி வரங்களை விரும்பினால் இயேசுவே பெலனும் கீதமுமாவார் நீதியின் கனிகளால் சுவிஷேசம் வெளிப்பட்டால் நீதிமான் கூடாரம் இரட்சிப்பில் கெம்பீரிக்கும் “நல்ல தேவ வழி சுவிசேஷம்”
6. மீட்கப்பட்டவர் பாதை சுவிசேமானால் சுவிசேஷ பாதை பட்சியும் அறியாதே மனுகுல மீட்புக்கு வேறு வழியில்லையே இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவன் ““நல்ல பரிசுத்த சுவிசேஷம்”
7. தண்ணீரை கடக்கும் போது நீ பயப்படாதே அவைகள் உன் மேல் புரளுவதில்லை அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய் அக்கினி ஜீவாலை உன் பேரில் பற்றாது “நல்ல ஜீவ நதி சுவிசேஷம்”
8. சுவிசேஷத்தின் ஆழம் ஜீவ நதியே ஜீவ நதியும் தெளிவான நதியே தெளிந்த நதி உள்ளத்தில் பாய்ந்தால் நீச்சல் ஆழத்தில் நீந்தியே சொல்வோம் “நல்வ ஆசீர்வாத சுவிசேஷம்”
9. அறுவடைக்கு நிலம் எப்போதும் ஆயத்தமே ஆட்கள் அறுவடைக்கு ஆயத்தமானால் ஆசீர்வாத அறுவடை அமோகமாகும் முப்பதும் அறுபதும நூறுமாய் பெறுவோம் “நல்ல சீயோன் சுவிசேஷம்”
10. கழுவப்பட்ட சீயோன் பரிசுத்த ஸ்தானம் மீந்திருக்கும் சீயோன் திராட்சைக்குச்சி தேற்றப்படும் சீயோன் ஒப்பிரின் தங்கம் ஓய்ந்திராத சீயோன் சுவிசேஷம் பேசும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal