இயேசு அப்பா என் நேச அப்பா
yesu appaa en nesa appaa
1.இயேசு அப்பா என் நேச அப்பா இயேசு அப்பா என் சொந்த அப்பா -2 இன்பம் தரும் இயேசு அப்பா இன்னல் நீக்கும் இயேசு அப்பா -2
2.மகிமை நிறைந்த அப்பா மகத்துவத்தை அணிந்த அப்பா -2 மாசில்லாத தூய அப்பா மானிடரை நேசிக்கும் அப்பா -2
3. பரிகாரியான அப்பா பரம பிதாவான அப்பா -2 பரிசுத்தம் நிறைந்த அப்பா பரலோகில் வீற்றிருக்கும் அப்பா - 2
4. ஜெபமதைக் கேட்கும் அப்பா ஜெயமதைக் கொடுக்கும் அப்பா -2 ஜெய வேந்தரான அப்பா ஜெயம் என்றும் உமக்கே அப்பா -2
5. பாரினில் மிகப்பாடுகள் பாவிகட்காய் அடைந்த அப்பா -2 பாரக்குருசில் ஜீவனையும் பாவிகட்காய் விட்ட அப்பா -2
6. உன்னதங்களில் உயர்ந்த அப்பா உலகோர் வானோர் வணங்கும் அப்பா -2 உண்மையான மெய் தேவன் அப்பா உலகம் தோன்றும் முன்னே இருக்கும் அப்பா -2
7. சாவாமையை உடைய அப்பா சாவாமையைக் கொடுக்கும் அப்பா -2 அழியாமையை உடைய அப்பா அழியா ராஜ்யமதைக் கொடுக்கும் அப்பா -2
8. துன்பம் துயர் துடைக்கும் அப்பா கவலை கண்ணீர் போக்கும் அப்பா -2 நோய் வியாதி நீக்கிடும் நல்ல அப்பா இயேசு அப்பா
9. இயேசு அப்பா என் அன்பின் அப்பா என்றும் நான் உம் அடியான் அப்பா -2 இயேசு அப்பா என் ஆருயிர் அப்பா எப்போதும் நான் உம் அடிமை அப்பா -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj