யார் இருந்தால் எனக்கென்ன
yaar irundhaal enakkenna
யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள் உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே-2
(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை மாறாத தேவ கிருபை-2 என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2 யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2
1.தாயின் வயிற்றினிலே என் கருவை கண்டவரே அவயங்கள் உருவாகும் முன் என்னை குறித்து அறிந்தவரே-2 உலக தோற்றம் முதல் முன் குறித்து வைத்தவரே உள்ளங்கையிலே-என்னை வரைந்த தெய்வம் நீரே-2-விலகாத
2.உடைந்த மண்பாண்டம் வீதியிலே கிடந்தேனே அழகும் இல்லாமல் உறுவற்று போனேனே-2 என்னை மீட்டெடுக்க இறங்கி வந்த தெய்வம் நீரே அழகும் சவுந்தர்யமும் எனக்காக இழந்தவரே-2-விலகாத
3.துவக்கமும் முடிவும் எல்லாமே நீர் தானே ஆதியும் அந்தமும் எல்லாமே நீர் தானே-2 உமக்கு மறைவான சிருஷ்டி ஏதும் இல்லையப்பா உம்மை விட்டால் உலகத்திலே வாழ எனக்கு வழி இல்லப்பா-2-விலகாத
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar