விளக்கில்லாமலே வெளிச்சம்
vilakkillaamalae veliccham
விளக்கில்லாமலே வெளிச்சம் தேடிடும் விட்டில் பூச்சிகள் இரவு தாண்டாமல் விடியல் தேடிடும் சின்ன சின்ன சூரியன்கள்.. வேத வசனம் விளங்காமல் - அத் ஆழம் அறியாமல் ஆகாய சிலம்பம் ஆடும் மனிதர்கள்
1. விழிகள் இல்லாமல் தினம் தினம் தரிசனம் காண துடிக்கும் கண்கள் - வேத வார்த்தைக்கு வெளியில் வாழ்வைத் தொலைத்துவிட்டு வானம் பார்க்கும் உள்ளங்கள் உழைத்திடாமலே ஊதியம் பெற துடித்திடும் நெஞ்சங்கள் - இந்த உண்மை உணராமல் உரத்து கூச்சலிட்டு ஒளிந்திடும் நகரங்கள்
2. வேதம் நமக்கு வந்த வழிகள் அறியாமல் விளக்கமளிக்கும் சித்தர்கள் - அதை நமக்கு தந்தவர் செய்த தியாகம் அறியாமல் உருட்டி புரட்டும் எத்தர்கள் - தூய ஆவி பெயராலே ஆட்டம் போட்டு - கீழே விழுந்து புரளும் மனுடர் - ஒரு நாளில் இரகசியம் வெளிவரும் - அடைய பாவம் இந்த மனிதர்
மனக்கண் திறந்திடும் வெளிச்சம் வீசிடும் காலம் வர வேணுமே - பல பாதங்கள் மாறும் தீமைகள் ஓடும் நாட்கள் மலரனும் மனையாட்டி சபையாக - மணவாளன் முகம் காணவே கறை திறை நீங்கி திருச்சபை ஜொலிக்கும்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam