வெள்ளை மனம் கூட
vellai manam kooda
வெள்ளை மனம் கூட தொல்லையாக விடும் இல்லையென்று சொல்வாயோ மனமே முல்லை மலர் சிரிப்பின் வெள்ளை நிறம் - அந்த கள்ளிப்பாலும் உண்டு மனமே அள்ளி பருக முடியுமா மனமே
1. ஏதும் அறியாத அப்பாவி தம்பி ஏதேனின் அருகினில் கொன்று விடும் பல வண்ண ஆடை அணிந்த தமயனை பாழும் கிணற்றில் தள்ளி விடும் பொல்லாத உலகமடா இதை நம்புவது மடமையடா - வெள்ளை
2. பெரும் மழைக்கு ஒதுங்க பேழை செய்தவனை பழரசம் கொடுத்து மயக்கிடும் எரியும் நெருப்பில் தம்பி மலையில் ஒளிந்தவனை பாவ சேற்றில் அமிழ்த்திடும் இது சோதோமின் கூட்டமடா - இதை விலக்கிட வேண்டுமடா - வெள்ளை
3. எழுதி கொடுத்தாலும் மலையில் உடைத்தவனை கானானில் நுழைந்திட தடுத்திடும் கழுதை உரைத்தாலும் ஏற்க மறுத்தவர் பாதி கூட்டமும் தொடர்ந்திடும் இது பிலேயாம் கூட்டமடா புறக்கணித்த வேண்டுமா - வெள்ளை
4. சாதியால் பிரித்து சாதிக்க நினைத்தது சரியாக போனதடா - இதை தெரிந்த பின்னும் நீ உறங்கி கிடப்பது சரித்திர கொடுமையடா இது வந்தேறி கூட்டமடா இதை விரட்ட வேண்டுமா - வெள்ளை
5. மனிதன் எதிர்த்தாலும் மூடி மறைத்தாலும் தேவ கரம் காக்கும் தினம் பலத்த அவர் கரத்தில் அடங்கியிருந்தால் உயர்த்தும் தேவன் அவர் மனமே அவர் வலக்கரம் நிழல் தருமே நம்மை அநுதினம் நடத்திடுமே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam