வெள்ளை காகிதத்தில்
vellai kaagidhathil
வெள்ளை காகிதத்தில் கவிதை தேடுகின்ற கருப்பு பேனாக்கள்! வெள்ளை காகங்களை சாறிபாத்தில் தேடும் கறுப்பு எலியாக்களே! எலியாவின் தேவன் எங்கே எங்கே - என பாட்டு பாடும் மனிதா - கர்த்தர் தேடும் எலியாக்கள் எங்கே - என அவர் அழைக்கும் குரல் கேட்குதா
சோதோம் கெமோராவில் இவன் ஏதேனை தேடினான் - சொந்த தமயனின் உருவிலே - சொத்தில் உரிமையை நாடினான் பாதை மாறி தேவ வாக்கை கேளாமல் தர்ஷீஸ் படகேறினான் - தனி
பார்வோனின் பெலத்திலே - இவன் பெலப்பட விழைகிறான் - பொல்லா எகிப்தின் நிழலிலே - தினம் ஒதுங்கவே விரைகிறான் - கொஞ்சம் இலகுவுண்டாயிற்றென்று அறிந்தபோது - தன் இதயம் கல்லாக்கினான் - கொஞ்சம்
பாபிலோன் விருந்தினை தினம் ருசிக்கவே துடிக்கிறான் - கெட்ட யேசபேல் உதவியால் - பழத் தோட்டத்தைப் பறிக்கிறான் வியாதியால் உடல் சேர்ந்தபோது பரிகாரிகளை தேடினான் - கொடும்
ஆபத்து வேளையில் நீ தேவனை தேடியே - அவர் கரத்துக்குள் அடங்கினால் - உனை காக்கும் நிழலாகுவார் அறியக்கூடாத அற்புதமான - பெரும் காரியம் செய்குவார் - நீ
எலியாவின் தேவன் எங்கே எங்கே - என தேடி ஓடும் மனிதன் - கர்த்தர் தேடும் எலியாக்கள் இங்கே இருக்கிறோம் என்று பாடு மனிதா
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam