வாழ்ந்தது போதும்
vaazhndhadhu podhum
வாழ்ந்தது போதும் - நீ எனக்கு வேண்டும் - என எடுத்துக்கொண்டீரோ - நீ உழைத்தது போதும் - இனி இளைப்பார வேண்டும் - என்று சேர்த்துக்கொண்டீரோ - நெஞ்சோடு அணைத்துக்கொண்டீரோ
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள் - முதற் வரிசையிலே உயிர்த்தெழுந்து எதிர்கொள்ளுவார்கள் என்னோடு அமர்ந்து கொள்வார்கள் - வாழ்ந்தது
நண்பன் இல்லையே அவர் நட்பும் இல்லையே எதிரியில்லை எதிர்ப்பு மில்லை எதுவுமில்லை சூரியன் கீழ் நடப்பதிலொரு பங்குமில்லை இவர் பேர்முதலாய் நினைவில் கூட இருப்பதில்லை - எந்த பலனுமில்லையே
சூரியன் இல்லை சந்திரன் இல்லை ஆட்டு குட்டி வெளிச்சம் தர இருள் அங்கு இல்லை அழகு இல்லை எந்த கவலையில்லை-அங்கு கொள்வனையும் கொடுப்பனையும் ஏதுமில்லையே அந்த தொல்லை இல்லையே
முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போக சமுத்திரமும் இல்லாமல் போகும் புதிய வானம் பூமி புதிய எருசலேம் நகரம் பரலோக தேவன் இடத்தை விட்டு இகத்தினில் இறங்கும் - அது நமக்கென இருக்கும்
நகரத்தின் நடுவில் நதிக்கரையோரம் மாதந்தோறும் ஜீவ மரம் கனிகளைக் கொடுக்கும் அதன் இலைகள் ஜனங்களுக்கு சுகம் அளிக்கும் - மிக தெளிவான பளிங்கு நதி நகரத்தை நனைக்கும் - தூய நகரத்தை நனைக்கும்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam