உன்னதர் இயேசு
unnadhar yesu
உன்னதர் இயேசு உயிர்த்தெழுந்தார் மூன்றாம் தினமதிலே - நம் உள்ள தேவன்
உன்னதம் விட்டிவ் உலகினில் வந்தவர் - 2 உலகோர்க்காய்த் தம் உயிரையே விட்டவர் - 2 உயிர்த்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார்
கர்த்தாதி கர்த்தராம் கிறிஸ்து இயேசு நாதர் - 2 ராஜாதி ராஜாவாய் ஜெயித்தெழுந்தாரே - 2 கல்லறைவிட்டு - கல்லறைவிட்டு
சிலுவையின் மேல் ஜெயம் சிறந்தவர் இயேசு - 2 பகையாம் நடுச்சுவர் தகர்த்தெறிந்தோராய் - 2 ஜெயம் சிறந்தார் - ஜெயம் சிறந்தார்
சத்துருவாம் சாத்தானின் தலையதனையே - 2 சிலுவையில் தகர்த்து உடைத்தெறிந்து - 2 ஜெயம் சிறந்தார் - ஜெயம் சிறந்தார்
பாவத்தின் மேல் ஜெயம் சிறந்தவர் இயேசு - 2 பாவிகளின் மீட்புக்காய் ஜெயம் சிறந்தோராய் - 2 ஜெயித்தெழுந்தார் - ஜெயித்தெழுந்தார்
பாடுகளின் மேல் ஜெயம் சிறந்தவர் இயேசு - 2 பாதாளத்தின் மேலும் ஜெயம் சிறந்தோராய் - 2 உயிர்த்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார்
உலகத்தின் மேல் ஜெயம் சிறந்தவர் இயேசு - 2 மீறுதல் மேலும் ஜெயம் சிறந்தோராய் -2 ஜெயித்தெழுந்தார் - ஜெயித்தெழுந்தார்
மரணத்தின் கூரதை ஒடித்து வெற்றி சிறந்தவர் - 2 மரணச் சங்கிலியைத் தகர்த்து ஜெயித்து - 2 உயிர்த்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார்
வாக்குத்தத்த வார்த்தைகள் மேல் வெற்றி சிறந்தவர் - 2 வானத்தின் மேலும் வெற்றி சிறந்தோராய் - 2 ஜெயம் சிறந்தார் - ஜெயம் சிறந்தார்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj