உனக்காக பிறந்தேனே
unakkaaga pirandhenae
உனக்காக பிறந்தேனே உனக்காக என்னைக் கொடுத்தேனே (2)
உனக்காக பழி சுமந்தேனே உனக்காக பலியானேனே என்ன செய்தாய் நீ எனக்காக? (2)
1.பிதாவின் அன்பை வெளிப்படுத்த இரட்சகராக பூமி வந்தேன் (2) என்னை ஏற்றுக்கொண்டாயோ உலக வாழ்வில் மிதந்தாயோ (2) யோசித்துப்பாரு என் மகனே யோசித்துப்பாரு என் மகளே
2. இரகசியமாக நானே வருவேன் பரிசுத்தமானதை அழைத்துச் செல்வேன் (2) அப்போது வருவாயோ - பின் எப்போது வருவாயோ (2) யோசித்துப்பாரு என் மகனே யோசித்துப் பாரு என் மகளே
3. நியாயத் தீர்ப்பின் நாளினில் வருவேன் நியாயாதிபதி நீதி செய்வேன் (2) மன்னிக்கவும் மாட்டேனே மனதுருகவும் மாட்டேனே யோசித்துப்பாரு என் மகனே யோசித்துப்பாரு என் மகளே
எனக்காக பிறந்தீரே எனக்காக தன்னை கொடுத்தீரே (2) எனக்காக பழி சுமந்தவரே எனக்காக பலியானவரே எதையும் செய்வேன் தேவா உமக்காக எதையும் செய்வேன் தேவா உமக்காக
எனக்காக பிறந்தீரே எனக்காக தன்னை கொடுத்தீரே (2)
More from Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- நன்றி சொல்லிப் பாடிடுவேன்nandri sollip paadiduvenBro. David · Senaigalin Karthar Parisuthar