கருப்பு என்றாலும்
karuppu endraalum
கருப்பு என்றாலும் சிவப்பு என்றாலும் பேதம் பாராத தேவன் உயரம் பெரிதா உயரம் சிறிதா பிரித்துப் பாராத தேவன் நம் உள்ளத்தைத் தானே தேவன் பார்க்கிறார் - அதில் நல்லதைத் தானே ஒன்று சேர்க்கிறார் (கருப்பு)
1. உன் நாவில் சொற்கள் பிறக்கும் முன்னரே நம் கர்த்தர் உன்னை அறிந்திருக்கிறார் (2) உன் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னரே (2) பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு ஒருவரே (2) (கருப்பு)
2. தம் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறார் உன் தாய் மறந்தாலும் அவர் மறப்பதில்லையே (2) உன் கண்ணில் நீர் என்றால் கண் இமைக்கும் நேரத்தில் (2) தன் மகனை (மகளை) தேடியே ஓடி வருபவர் (2) (கருப்பு)
3. நீ ஏழை என்றால் உன்னை வாழ்வில் உயத்துவார் நீ கோழை என்றால் பெலன் தந்து உதவுவார் (2) நீங்களே தேவனின் ஆலயமாய் இருக்கிறீர் (2) உங்களில் ஆவியானவர் வாசமாய் இருக்கிறார் (2) (கருப்பு)
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- நன்றி சொல்லிப் பாடிடுவேன்nandri sollip paadiduvenBro. David · Senaigalin Karthar Parisuthar