உம்மோடு இருக்க வேணுமே
ummodu irukka venumae
உம்மோடு இருக்க வேணுமே - உங்க உங்க அன்பை அள்ளி பருக வேணுமே விடுதலை தந்தவரே புது பெலன் ஈந்தவரே உமது பாதம் அமரவேண்டுமே - தினம் தினம் - நான் உமது வார்த்தை கேட்க வேண்டுமே
1. பாவம் செய்த கண்களுக்கு நித்திரையும் தூரமாச்சி பாவி எந்தன் வசிப்பிடமாய் கல்லறை தான் மாறிடுச்சி நம்பிக்கையின் நங்கூரமே நம்பி உம்மை தொடர்ந்திடவே உமது கண்களில் தயவு வேண்டுமே - அநுதினம் என்னை நன்மை கிருபை தொடர வேண்டுமே - உம்மோடு
2. என் இதய ஏக்கமெல்லாம் அறிந்தவர் யாருமில்லை என் மனதின் பாரங்களை புரிந்தவர் எவருமில்லை கருவினில் தெரிந்தவரே கரங்களில் வரைந்தவரே உமது பாதை தொடர வேண்டுமே - என் காலமெல்லாம் உமது வார்த்தை எனது பாடமே - உம்மோடு
3. வெண்ணிலவு நட்சத்திரங்கள் வான தூதர் சேனையெல்லாம் வானில் நீங்கள் வரும்பொழுது எங்களுக்கும் வழி கொடுக்கும் வியாசர் எந்தன் (மானிடர் எம்) பாடலுக்கு வானதூதர் இசையமைக்க ஆரவார முழக்கம் கேட்குமே - வெகு சீக்கிரம் அந்த நாளைக் காண ஆவல் பெருகுதே - உம்மோடு
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam