உம்மை மறவேன் என் இயேசுவே
ummai maraven en yesuvae
உம்மை மறவேன் என் இயேசுவே உம்மை தொழுவேன் எந்நாளிலுமே - 2 உம்மை நான் நினைப்பேன் ஒவ்வொரு நாளும் துதிப்பேன் என் தெய்வமே - 2
உம்மை மறவேன் உம்மை மறவேன் உம்மை மறவேன் என் இயேசுவே
தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை தந்தை என்னை வெறுத்த போதும் நீர் என்னை வெறுப்பதில்லை - 2 தாய் போல தேற்றி தந்தையைப் போல் அணைத்தீர் - 2 மார்மீது என்னை சாய்த்து மகிழும் நல்ல மேய்ப்பனே - 2
கவலை கண்ணீரோடு நான் கலங்கி நின்றபோது கர்த்தா உம் கரம் என்னை தேற்றி நடத்தி சென்றதே - 2 கலங்காதே என்று கண்ணீரை துடைத்தீர் திகையாதே என்று என்றும் என்னோடு இருந்தீர் நீரே என் தேவன் என்றும் எனக்குள் வாழும் ஜீவன் - 2
கண்ணின் மணிபோல என்னை தினம் காப்பவரே காலங்களெல்லாம் உடனிருந்து என்னை நடத்தினீரே - 2 இம்மட்டும் காத்த என் தேவன் நீரே இனிமேலும் காக்கும் இம்மானுவேலே உம்மை போல் தெய்வமில்லை உலகில் நானும் சொல்ல - 2 உம்மை மறவேன் உம்மை மறவேன் உம்மை மறவேன் என் இயேசுவே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)