உம்மை அன்றி உலகில்
ummai andri ulagil
உம்மை அன்றி உலகில் யார் துணை தேவா திரு அவதார தெய்வ குமாரா தேனிலும் இனியது மலரடி தா..தா.. யார் துணை தேவா... நீர் துணை தேவா .... 3
1. பரிசுத்தம் வேண்டும் இதயத்திலே பரிசுத்த தேவனை தரிசிக்கவே திரு சித்தம் கொண்டமை பரிசுத்த ராக்கிட மாசிலா உதிரம் சிந்திய தேவா - உம்மை
2. பாடுகள் வழியே பரமனை நாடு பாடுபட்டோர்க்குப் பலனளிப்பீரே அநுதினம் சிலுவைகள் சுமந்திட அருளும் நலிந்திடும் எமக்கினி நலந்தரும் தேவா - உம்மை
3. வருத்திடும் பாரம் சுமந்தலைவோரே வாருங்கள் என்றார் பாதம் வந்தோம் நுகந்தனை ஏற்றிட மனதை மாற்றும் சாந்தமும் தாழ்மையும் உள்ள என் தேவா - உம்மை
4. கேட்டதையெல்லாம் ஈந்தவர் சாற்றிடும் துதிகள் ஏற்றிடுவீர் துணையின்றி வாடினேன் துயர்மிகு முலகில் வலக்கரம் பிடித்து எம்மை நடத்திடும் தேவா - உம்மை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam