உம் சித்தம் மேலானது
um sitham melaanadhu
உம் சித்தம் மேலானது - எந்தன் இயேசுவே
1. உம் சித்தம் செய்யவே என்னை அழைத்தீரே -2 எந்தையே இயேசுவே என் சொந்த தேவனே -2
2. துரோகிமேல் துரோகியாய்த் துரோகத்தையே செய்த -2 துரோகியை அழைத்த மாதூயர் இயேசுவே -2
3.உம்மைக் கொலை செய்த ஈனப் பாவியை -2 மன்னித்தீர் கிருபையால் உம் சித்தம் செய்யவே -2
4. இயேசுவே உமது சித்தத்தை அறிந்தும் -2 உம் சித்தம் செய்யாதோர் தண்டனை அடைவரே -2
5.மதியற்றோராகவே ஒருவரும் இராமல் -2 தேவ சித்தத்தையே எப்போதும் செய்யுங்கள் -2
6. நீர் அழைத்த இந்தச் சிறியரில் ஒருவரும் -2 கெட்டுப் போவது உம் சித்தமே இல்லையே -2
7. தேவனின் சித்தத்தின்படி செய்பவரே -2 என்றென்றும் தேவனில் நிலைத்திருப்பரே -2
8.உம் சித்தத்தின்படி யாம் எதைக் கேட்டாலும் -2 எல்லாம் தந்தாசீர்வதிக்கும் எம் தேவனே -2
9. பரலோகத்தின் பிதாவின் சித்தம் செய்வோரே -2 பரலோக ராஜ்யத்தில் பிரவேசம் அடைவரே -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj