உலகம் ஒரு நாடகமேடை
ulagam oru naadagamedai
உலகம் ஒரு நாடகமேடை - அதில் நடமாடும் கல்லறை நான் நரகம் - நான் ஏன் செல்லவேண்டும் - அது சாத்தானின் இடமல்லவா பாவம் சாபம் யாவும் நீக்கும் - இயேசு சிந்திய கல்வாரி இரத்தம் - உலகம்
1. அதிகாலையில் மலரும் - அந்தி மாலையில் உதிர்ந்துவிடும் மலர் போன்ற ஒருநாளின் வாழ்வு சதமில்லை நிலையில்லை இகமீதிலே கொஞ்ச காலம் தோன்றி மறையும் புகையைப் போல காற்றினில் கரைந்துவிடும் - குளிர்
2. புல்லின் மேலமர்ந்து - மின்னும் பனித்துளி போலிருந்தும் இளங்காலை கதிர் வீசக் கண்டு உருண்டோடும் கரைந்தோடும் புவி வாழ்விதே என்ன கொண்டு வந்தாய் என்ன கொண்டு செல்வாய் மன்னாகி மறைந்திடுவாய்
3. வாலிபமும் அழகும் - வெறும் மாயை அழிந்துவிடும் - இந்த நீர் மேலே குமிழ்போல தோன்றி நினைக்கும் முன் மறைந்திடும் நொடிப்பொழுதில் காற்றில் ஏற்றி வைத்து கையால் மறைக்கும் தீபம் ஒரு நொடி நிலைத்திடுமோ - இங்கு
4. நிரந்தர வாழ்வெனக்கு - தரும் நீதியின் சூரியன் நினைத்தாலும் துதித்தாலும் இன்பம் நிலைவாழ்வு நிஜமாகும் நம் இயேசுவில் நானே வழியும் வாய்மை வாழ்வே என்றவர் வழியில் நடந்திட நரகமில்லை - இனி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam