தூண்டி விட்டு வேடிக்கை
thoondi vittu vedikkai
தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறான் - பிசாசு உன்னை ஆசை காட்டி அழிக்க பாக்குறான் - மிக தந்திரமாய் தூண்டவிடாதே அவனை அண்டவிடாதே இடங்கொடுத்தால் புகுந்திடுவான் அழிவுக்குள்ளே நடத்திடுவார் - தூண்டி
1. ஆதியிலே ஏவாளை ஏய்த்தவன் இவன் - அந்த ஆதாமை பாவத்திலே சாய்த்தான் இவனே - ஒரு மரத்தில் பழுத்த கனியைக் காட்டி முழு உலகையும் அழித்திடவே - தூண்டி
2. சிம்சோன் தூண்டியவன் இந்தப் பிசாசே - பாவ சங்கடத்தில் வீழ்த்தியவன் இந்தப் பிசாசே - ஒரு பொழுதில் அழியும் இனிமைக் காட்டி கணப்பொழுதில் அழித்திடவே - தூண்டி
3. யூதாசை தூண்டியவன் இந்தப் பிசாசே - அண்ணல் இயேசுவையும் தொடர்ந்து வந்த ஆதி பிசாசே - இனி தூண்டிய பின் நுழைந்திடவே தருணம் தேடி அலையும் இவன் - தூண்டி தூங்கி விடாதே அவனை துளியும் நம்பாதே தூங்கி விட்டால் அழிந்திடுவாய் தருணமிதே விழித்திடுவேன் - தூண்டி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam