திறப்பில் நிற்போம்
thirappil nirpom
திறப்பில் நிற்போம், சுவரை அடைப்போம் அழிவின் பாதையிலுள்ள பாரதம் காப்போம் ஒன்று சேருவோம், இணைந்து கட்டுவோம் வாலிப தலைமுறையின் நிலையை மாற்றுவோம்
யார் எனது காரியமாய் போவார்? என்ற ஆண்டவரின் சத்தம் கேட்போம், இதோ, நான் போகிறேன் என்ற வாக்குறுதியை சத்தமாய் உரைப்போம்!
ஜீவன் தந்த இயேசுவுக்காய் ஜீவனை துட்சமாய் எண்ணிடுவோம், ரத்தம் சிந்தி மீட்டவர்க்காய் ரத்தம் சிந்திட துணிந்திடுவோம்
நம் வாழ்வை ஊற்றிடுவோம், பானபலியாக நம் முழுமையும் சமர்ப்பித்திடுவோம், ஜீவபலியாக
தேசத்தின் சூழல் நம்மை அச்சுறுத்தலாம் எதிரியின் சேனை நம்மை சுற்றி நிற்கலாம் இந்த யுத்தம் நமக்குரியதல்ல கர்த்தர் யுத்தம் செய்வாரே சர்வ சிருஷ்டியின் எஜமானன் முன் பூமியின் அதிபதி தோற்பானே
ஜெபத்தில் தரிப்போம், அவர் வார்த்தையில் நிலைப்போம் துதியின் முழக்கத்தால் நம் தேசத்தை நிரப்புவோம் எண்பது கோடி வாலிபருக்கு இயேசுவின் அன்பை சொல்லிடுவோம் நரகம் நோக்கி செல்லும் நபரை பரலோகம் கொண்டு சேர்த்திடுவோம்
போவோம், போவோம்... நம்மேல் வைத்த அன்பின் விலையாய் விலையாய் மடிவோம் மடிவோம்... சுவிசேஷத்தின் விதையாய் விதையாய்!!!
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs