தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்
thevaigalai arindhu thinamdhinam nadathum
1.தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும் தேவாதி தேவனே போற்றுவேன் என் உயிருள்ள நாளெல்லாம் என் ஆத்தும நேசரை துதிபலி செலுத்தி போற்றுவேன்
2.கண்ணீரின் பாதையை கடந்திடும் நேரத்தில் கர்த்தரை தினம்தினம் போற்றுவேன் என் கவலைகள் யாவையும் தீர்த்திடும் கருணையின் சிகரமே உம்மைப் போற்றுவேன்
3.கவனிப்பார் யாருமின்றி கதறிடும் நேரத்தில் கரங்கள் விரித்து கர்த்தரை போற்றுவேன் என் கஷ்டத்தின் நடுவிலே கரம் நீட்டி தூக்கிய கர்த்தாவே (கதிரவனே) உம்மை போற்றுவேன்
4.வீணான வார்த்தைகளால் வதைத்திடும் நேரத்தில் விண்ணுலக ராஜாவை போற்றுவேன் என் இதயத்தின் நேசமே என் இயேசு ராஜனே எப்போதும் உம்மை போற்றுவேன்
5.கவலைகள் பெருகிடும் நேரத்தில் கர்த்தரை கருத்துடன் தினமும் போற்றுவேன் என் கன்மலையாம் கிறிஸ்துவை துதிகீதம் பாடியே நடனமாடி போற்றிடுவேனே
More from Yesuvin Prasannam
- அப்பாவின் முகம் காணappaavin mugam kaanaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம் முகம் பார்த்துum mugam paarthuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம்மை மறவாத மனம் வேண்டும்ummai maravaadha manam vendumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் இயேசுவே ஏன் இந்தen yesuvae en indhaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் மகனே நீ கைவிடப்பட்டுen maganae nee kaividappattuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- ஒரு சின்ன பிள்ளைபோல்oru sinna pillaibolPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- நித்தம் என்னை நேசிக்கும் இயேசையாnitham ennai nesikkum iyesaiyaaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- பரிசுத்த தேவனே பரிசுத்தparisutha devanae parisuthaPr. T. Inbakumar · Yesuvin Prasannam